search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஜய் ராய்"

    • அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.
    • பிந்த்ரா சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

    வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அஜய் ராய் போட்டியிடுகிறார்.

    கடந்த இரு பாராளுமன்ற தேர்தலிலும் மோடியை எதிர்த்து அஜய் ராய் களம் இறங்கினார். தற்போது மோடியை எதிர்த்து தொடர்ந்து 3-வது முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    54 வயதான அவர் வாரணாசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யாபித் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். தனது அரசியல் வாழ்க்கையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தொடங்கினார். பின்னர் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.

    1996-ம் ஆண்டு உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் கோலஸ்லா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2002-ம் ஆண்டிலும், பின்னர் 2007- ம் ஆண்டிலும் தேர்தலில் வென்றார். 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட டிக்கெட் மறுக்கப்பட்டதால் பா.ஜனதாவில் இருந்து விலகினார்.

    அந்த தேர்தலில் வாரணாசியில் சமாஜ்வாடி கட்சி சார்பாக போட்டியிட்டு தோற்றார்.

    2009-ம் ஆண்டு கோலஸ்லா சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அஜய் ராய் 2012- ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். புதிதாக உருவாக்கப்பட்ட பிந்த்ரா சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

    வாரணாசி தொகுதியில் 2014 மற்றும் 2019 -ம் ஆண்டு தேர்தல்களில் அஜய்ராய் 3-வது இடத்தை பிடித்தார். 2014-ம் ஆண்டு 7.34 சதவீத வாக்குகளும், 2019-ம் ஆண்டு 14.38 சதவீத வாக்குகளும் பெற்றார்.

    ×